ராஜினி உன்னிடமென்ன குற்றம் கண்டனர்?

காற்று
உன் மரணச்சேகதியை
காதில் அறைந்தது
வீதியோரம் உறைந்து கிடந்த
உனது குருதி
மனிதம் மரணித்ததை
மௌனமாகச் சொன்னது

நாம் என்ன செய்வோம்
வாயை இழந்தோம்
வெறும் வயிற்றுடன் மட்டும்
வாழ்ந்து தொலைக்கின்றோம்

தோழி;
சின்னஞ்சிறுசிட்டைப்போல
பறந்த திரிந்தாய்
நாம் பாடித்திரிந்தவீதியிலேயே
தன்னந்தனியாளாய்
அனாதையைப்போல
மரணித்தாயா?
உன்னிடமென்னகுற்றம் கண்டனர்? -ஒளவை- (எல்லைகடத்தல்)

ராஜனி-கண்ணீர் நினைவுகள்


ராஜனி ஒரு மருத்துவப்பேராசிரியர் யாழ்பல்கலைகழகத்தில் பணிபுரிந்தவர்விடுதலைப்போராட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர்.முறிந்தபனை நூலின் ஆசிரியர்.21-09-1989 ல் புலிகளால் கோரமாக கொலைசெய்யப்பட்டார்.அவரின் நினைவாக இப்படைப்பு.

என்றாவது ஒருநாள் ஒரு துப்பாக்கி என்னைஅமைகியாக்கி விடும். அது ஆனால் வேற்று மனிதனால் ஏந்தப்பட்டதாகஇருக்காது மாறாக எனது வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் இச்சமூகத்தில்வாழும் ஒரு பெண்ணின் கருவறையிலிருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே இருக்கும்.-(1989-09-15- ஒரு கடிதத்தில்)-

ராஜனி
இன்னும் கொஞ்சநேரத்தில்
சூரியன் மறைந்து விடுவான்

இருள்கவிந்து விடும்

இனி வரப்போகிற இருள்
முன்பு போல அல்ல
பிசாசு

நிலாவைக் கொலை செய்து
வெள்ளிகளை போட்டெரித்த
சாம்பல் பூசிய இரவு
இந்த இரவுக்கு முன்
ஒரு சிறு விளக்கை
அல்லது ஒரு மெழுகுதிரியை
ஏற்றிவிடவேண்டும் என்று
விரைந்தாய்

அம்மா,
வேகம் அவர்க்கதிகம் இன்று
தென்திசை நின்று வந்தனர்
யமனின் தூதர்கள்;
கைத்துப்பாக்கி;
ஐந்து குண்டுகள்

நீ விழுந்த போது
சூரியனின் கடைசிக் கிரகணங்கள்
சுவரில் விழுத்திய
உன் நிழல்
கைகளை வீசி மேலே ஓற்கிற்று.
-சேரன்-

ராஜினி உன்னிடமென்ன குற்றம் கண்டனர்?

hello friends

we will share our dreams

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!